Introduction
இன்றைய ஓட்டப்பந்தய உலகில் எதற்கும் நேரமில்லை ,ஆம் இதுதான் உண்மை . டீ குடிக்க வேண்டும் என்றால் பால் வாங்கி, இஞ்சி தட்டி என நேரத்தை செலவிட பலருக்கு முடிவதில்லை. இதற்கு தீர்வாக வருகிறது "Instant Masala Tea Powder". பால் பவுடர், மிளகு, ஏலக்காய் என அனைத்தையும் கலந்து நீங்கள் தயார் செய்யும் இந்த பவுடரில் சுடுதண்ணீர் சேர்த்தால் போதும், நறுமணமிக்க டீ தயார்! இது ஒரு மிகச்சிறந்த சுயதொழில் வாய்ப்பாகும்.இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம் .
தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை
தேவையான மசாலா டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் (Ingredients)
உயர்தரமான சுத்தமான பால் பவுடர் (Hygienic Milk Powder), மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு). இவையே இந்த மேஜிக் பவுடரின் அடிப்படை.
அரைக்கும் முறை (Grinding Process)
மேலே சொன்ன அனைத்து மூலிகைப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் சலித்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கினால், மணமிக்க இன்ஸ்டண்ட் மசாலா டீ பவுடர் தயார்.
பயன்படுத்தும் முறை (How to Use)
ஒரு ஸ்பூன் பவுடரை ஒரு கப்பில் போட்டு, அதில் கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றி நன்றாகக் கலக்கினால் போதும். வடிகட்டத் தேவையில்லை, பால் சேர்க்கத் தேவையில்லை! தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கலாம் .(டயாபடீஸ் friendly )
வணிக வாய்ப்புகள் மற்றும் லாபம்
பாக்கெட் செய்து விற்பனை செய்தல் (Packaging)
இந்த பவுடரை சிறிய சாஷேக்கள் (Sachets) அல்லது 100 கிராம் பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்யலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.
யாருக்கெல்லாம் விற்கலாம்? (Target Audience)
அலுவலகம் செல்பவர்கள், மருத்துவ கேன்டீன்கள் ,ரயில்வே ஸ்டேஷன் ,பஸ்ஸ்டாண்ட், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் பயணம் செய்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தயாரிப்பு.
சந்தைப்படுத்துதல் (Marketing)
உங்கள் பகுதியில் உள்ள சிறிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் இதனை விற்பனை செய்யலாம்.
Tips
மேலும் முக்கியமாக ,சுக்கு மற்றும் மிளகு சேர்ப்பதால் இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக அமையும் (Detoxing effect).
பவுடரை ஈரப்பதம் இல்லாத காற்றுப்புகாத டப்பாக்களில் (Air-tight container) சேமித்து வைப்பது அவசியம்.
Question and Answers (Q&A)
Q: இதில் சர்க்கரை சேர்க்க வேண்டுமா?
A: நீங்கள் தயாரிக்கும் போதே தேவையான அளவு சர்க்கரை பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வாடிக்கையாளர் விருப்பப்படி தனியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
Q: இந்த பவுடர் எவ்வளவு நாள் வரை கெடாமல் இருக்கும்?
A: சரியாக பேக் செய்யப்பட்டால் 3 முதல் 6 மாதங்கள் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
Conclusion
குறைந்த முதலீட்டில், அதிக சிரமம் இல்லாமல் வீட்டிலிருந்தே ஒரு பிராண்டை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த "இன்ஸ்டண்ட் மசாலா டீ பவுடர்" தொழில் ஒரு பொற்கால வாய்ப்பு.
Contact for small business mentorship in Salem
இது போன்ற பிரத்யேகமான பிசினஸ் ஐடியாக்களைப் பெற எமது சேலம் சிட்டி பிசினஸ் கம்யூனிட்டியில் இணைந்திருங்கள்!
Tags & Related Articles
Tags: Instant Tea Powder, Masala Tea Premix, Homemade Business, Salem Startup, Healthy Drink Business
- How to increase shop customers (700% growth formula)
- Today's Gold Price in Salem
- Business Directory of Salem - Free Registration

.jpg)
Comments